கொரோனா 3வது அலையை தடுக்க புதிய வழிமுறைகள்! தமிழக அரசு!

 
கொரோனா 3வது அலையை தடுக்க புதிய  வழிமுறைகள்! தமிழக அரசு!

தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் சமூக இடைவெளி முகக்கவசம் இவற்றை தொடர்ந்து பயன்படுத்தவும், தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

கொரோனா 3வது அலையை தடுக்க புதிய  வழிமுறைகள்! தமிழக அரசு!

இந்நிலையில் உலக நாடுகளில் 3 வது அலை பரவ தொடங்கியுள்ளது. இந்த வகையில் மூன்றாவது அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இறையன்பு, ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்படாமல் மக்கள் அலட்சியமாக நடமாடி வருகின்றனர். மூன்றாம் அலைக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை மற்ற இடங்களை காட்டிலும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அலட்சியமாக செயல்படும் கடைகள் மீதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலையை தடுக்க புதிய  வழிமுறைகள்! தமிழக அரசு!

கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டில் வராததால் அந்தப் பகுதிகளில் எல்லாம் கூடுதல் கண்காணிப்புகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்டங்களில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இன்னும் எவ்வளவு பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்பது குறித்தும் விரிவாக கேட்டறியப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுப்பது, கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்வது, வீடு வீடாக கொரோனா சளி பரிசோதனை மேற்கொள்வது எனப் பல்வேறு அறிவுறுத்தல்களையும் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கியுள்ளார்.

From around the web