இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிக்கு 11 உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

 
இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிக்கு 11 உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கொளத்தூரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த வாரம் விண்ணப்பன் பெறப்பற்று, தற்போது அதற்கான நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 9 உதவி பேராசியர், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமனம் ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்த நிககழ்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

From around the web