அதிர்ச்சி!பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிய செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி!

அதிர்ச்சி!பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிய செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி!

சென்னையில் பிஎஸ்பிபி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவீர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை அடுத்து பல பள்ளிகளில் இருந்து மீ டூ பிரச்சனையில் சிக்கியிருப்பதாக புகார் அளித்து வருகின்றனர்.

அதிர்ச்சி!பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிய செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி!

அந்த வகையில் செயின்ட் ஜார்ஜ் பள்ளி, மகிரிஷி வித்யா மந்திரி பள்ளியை அடுத்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி!பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிய செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி!

இந்த முன்னாள் மாணவர்களின் புகார் பற்றி தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் படி ஜூன் 8ம் தேதி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதிர்ச்சி!பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிய செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி!

இது வரை அளிக்கப்பட்ட புகார்களில் ஒன்று கூட விசாரிக்கப்படவில்லை என செட்டிநாடு வித்யாஷ்ரம் முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் புகாராக கையெழுத்திட்டு மாநில குழந்தைகள் நல உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதிர்ச்சி!பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிய செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி!

தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக புகார்கள் வந்திருந்தும் அந்த புகார்கள் அளித்தும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்தவொரு ஆசிரியரையோ அல்லது ஆசிரியர் அல்லாத பள்ளி அலுவலரையோ விசாரிக்கவில்லை என்பது தான் மாணவிகளின் குற்றச்சாட்டு.

பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ள பழைய புகார்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னாள் மாணவிகள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகாராக மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web