போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டியில் ரூ.5.49 கோடி மோசடி!

 
போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டியில் ரூ.5.49 கோடி மோசடி!

ரூ.5.49 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரியை (ஐடிசி) மோசடியாக பெற்ற நபர்களை, சென்னையில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பணியாளர்களை அனுப்பும் சேவைகள் வழங்குவதாக சென்னையில், இரு நிறுவனங்களை சிலர் நடத்தி வந்துள்ளனர். அளிக்கப்படாத சேவைக்கு இவர்கள் ரூ.45.72 கோடிக்கு போலி ரசீதுகள் உருவாக்கி, அதன் மூலம் ரூ.5.49 கோடி உள்ளீட்டு வரியை மோசடியாக பெற்றுள்ளனர்.

போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டியில் ரூ.5.49 கோடி மோசடி!

இது குறித்து சென்னையில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரக அதிகாரிகள், மோசடி நிறுவனங்களின் அலுவலகங்களிலும், அதன் உரிமையாளர் வீட்டிலும், கடந்த மாதம் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் சோதனை நடத்தினர்.

போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டியில் ரூ.5.49 கோடி மோசடி!

இதில் போலி நிறுவனங்களை நடத்தி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கண்டறிப்பட்டன. இந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் 2 இயக்குனர்கள் இந்த மோசடிக்கு காரணம் என தெரியவந்தது. இதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் ஆஜர்படுத்தினர். இந்த மோசடி தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகத்தின், முதன்மை கூடுதல் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

From around the web