மாஞ்சா நூல் விற்பனை, பட்டம் பறக்க விட தடை !

 
மாஞ்சா நூல் விற்பனை, பட்டம் பறக்க விட தடை !


தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால் சிறுவர்கள், இளைஞர்கள் மாடியில் இருந்து பட்டம் விடத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் சென்னையில் மாஞ்சா நுால் விற்பனை மற்றும் அதன் மூலம் காற்றாடி பறக்க த்டை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை உத்தரவு ஏற்கனவே அமுலில் இருந்த நிலையில் தற்போது ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாஞ்சா நூல் விற்பனை, பட்டம் பறக்க விட தடை !


மாஞ்சா நூலில் பட்டம் விடுவதால் அடிக்கடி ஏற்பட்டு வந்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. மாஞ்சா நூல் கண்ணாடியை அரைத்து அதை பூசி தயாரிக்கப்படுவதால் கழுத்தை அறுத்து உயிரிழப்பை ஏற்படுத்தி விடும்.


இதனையடுத்து மாஞ்சா நுால் தயாரிப்பது, விற்பது மற்றும் பதுக்கி வைக்கும் செயலுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல, மாஞ்சா நுாலில் காற்றாடி விடுவதற்கும் காவல்துறை தடை விதித்துள்ளது.தற்போது ஊரடங்கு காலமாதலால் மறுபடியும் ஆன்லைனில் மாஞ்சா நுால் விற்பனை காவல்துறையின் கவனத்திற்கு சென்றது. இதனடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும், அது குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது . தடையை மீறுபவர்கள் மீது,கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web