13 நிறுவனங்களை உருவாக்கி ரூ 121 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

 
13 நிறுவனங்களை உருவாக்கி ரூ 121 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

போலி நிறுவனங்களின் வாயிலாக போலி ஆவணங்கள் மூலம் அதிகளவிலான உள்ளீட்டு வரி கடன் மோசடியில் ஈடுபட்டதற்காக பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட மூவரை ஹரியானாவில் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தின் குருகிராம் மண்டல பிரிவு கைது செய்துள்ளது.

இது வரையில் நடைபெற்றுள்ள விசாரணையில், கைதான மூவரில் ஒருவர் மட்டும் குறைந்தது 13 நிறுவனங்களை உருவாக்கி ரூ 121 கோடி மதிப்புள்ள உள்ளீட்டு கடன் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

13 நிறுவனங்களை உருவாக்கி ரூ 121 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

மேற்கண்ட நபர் கமிஷன் ஏஜண்ட் ஒருவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு இடங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு, சரிபார்ப்புகள், ஆதாரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தில்லி தலைமை மாநகர நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web