ஷாப்பிங் செயலிகளுக்கு தடை!கூகுள் அதிரடி!

 
ஷாப்பிங் செயலிகளுக்கு தடை!கூகுள் அதிரடி!

கடைகளுக்கு சென்று காத்திருந்து பொருள்களை தேடி வாங்குவதில் ஆர்வம் குறைந்து இப்போதெல்லாம் அனைத்து பொருட்களையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வாங்குவதையே விரும்புகின்றனர். இதனையடுத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல ஷாப்பிங் செயலிகள் இணையதள விற்பனையை மக்களிடம் கொண்டு செல்ல புதிய சலுகைகளை தினம் தினம் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், தங்களது இணையத்திலேயே தேவையான பொருள்களை வாங்கும் வகையில் புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஷாப்பிங் செயலிகளுக்கு தடை!கூகுள் அதிரடி!

எனவே அடுத்த சில வாரங்களில் இணையதள செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக ஷாப்பிங் டேப் என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

அதில் செயலியில் பொருள்களை வாங்குவதைப் போன்றே தங்களது மின்னஞ்சலை பயன்படுத்தி பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அந்த செயலி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் செயலிகளுக்கு தடை!கூகுள் அதிரடி!

கூகுள் கணக்கைப் பயன்படுத்தி இணையதள விற்பனை மையங்களில் தேவையான பொருள்களை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு இயங்குதளங்களிலும் ஷாப்பிங் செயலிகள் விரைவில் நீக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web