தண்டனை வழங்கிய நீதிபதி மீது செருப்பு வீச்சு! கோர்ட்டில் பரபரப்பு!

குஜராத்தில் போக்சோ கைதிக்கு ஆயுள் தண்டனை வழங்கியதால், கோபமடைந்த குற்றவாளி நீதிபதியின் மீது செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத், சூரத் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை, 27 வயதுடைய நபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இது தொடர்பில் அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கு நேற்று சூரத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பின் 26 சாட்சியங்கள் மற்றும் 53 ஆதராங்களின் படி, குற்றவாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி தனது செருப்புகளை கழட்டி நீதிபதி மீது வீசினார். ஆனால், அது சாட்சிக் கூண்டுக்கு அருகிலேயே விழுந்தது. இதனையடுத்து காவல்துறையினர் குற்றவாளியை அங்கிருந்து அப்புறப்படுத்தி சிறையில் அடைத்தனர்.