அரசு ஊழியர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்!!
Dec 30, 2021, 10:55 IST

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, சார்ஜா அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்காக வரும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற பிசிஆர் முடிவுகளை கையில் வைத்திருக்க வேண்டும்.

2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் முடிவுகளைவும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளைவும் கையில் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
From
around the
web