சூப்பர் ஸ்டார் சூர்யா?! யார் சொன்னா?! அவரே சொல்லிக்கிட்டாரு?!

 
சூப்பர் ஸ்டார் சூர்யா?! யார் சொன்னா?! அவரே சொல்லிக்கிட்டாரு?!

அஜித், சூப்பர் ஸ்டார் ரேஸில் நான் இருக்கிறேன் என்று பகீரங்கமாக பேசியது தான் அதன் பிறகு அவரை தொடர்ந்து சகஜமாக எல்லோரிடமும் பேச விடாமல் செய்து வந்தது. லிட்டில் சூப்பர் ஸ்டார், ஹைட் சூப்பர் ஸ்டார், வெயிட் சூப்பர் ஸ்டார் என்று சூரியன் சும்மா இருந்தாலும் யாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விடுவதாக இல்லை போலிருக்கிறது.

அடுத்த எம்.ஜி.ஆர் வழியில் விஜய் பயணிக்க துவங்கி ரொம்ப வருஷங்களாச்சு. சினிமா, அரசியல் என ஒவ்வொரு காய் நகர்த்தலையும் கவனமாக செய்கிறார் விஜய். அஜித் இப்போது எல்லாம் பரபரப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டார். அவர் வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறார். இந்த சூர்யாவுக்கு என்னாச்சு? என்பது தான் மொத்த சினிமா உலகின் ஆச்சர்யமாக இருக்கிறது.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெய்லர் வெளியீடு குறித்து செய்தியை சூப்பர் ஸ்டார் சூர்யா என்கிற அடைமொழியோடு அனுப்பியிருக்கிறார்கள். நாளை மறு நாள் அக்டோபர் 22 அன்று வெளியாகிறது ட்ரெய்லர். ஏற்கெனவே அரசியல் களத்திலும் தைரியமாக கருத்துக்களைச் சொல்வது, மருத்துவமனை குறித்த ஜோவின் பேச்சுக்கு உறுதுணையாய் நின்றது, இன்னொரு பக்கம் தம்பி கார்த்தி தமிழக விவசாயிகளை ஒருங்கிணைப்பது, அகரம் மூலமாக தமிழகம் முழுவதும் வேர் பரப்பியிருப்பது என்று கன கச்சிதமாக வளர்கிறார் சூர்யா. இந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் தேவையா? என்று புலம்புகிறார்கள் ரசிகர்கள்.

From around the web