OTT யில் வெளியாகும் ஒற்றைப் பனைமரம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

 
OTT யில் வெளியாகும் ஒற்றைப் பனைமரம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’.

OTT யில் வெளியாகும் ஒற்றைப் பனைமரம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் இதுவரையில் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனைமரம்’ உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைக்க, தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

From around the web