மைக் டைசனுக்கு குரல் கொடுக்கும் பாலகிருஷ்ணா

 
மைக் டைசனுக்கு குரல் கொடுக்கும் பாலகிருஷ்ணா

கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘லைகர்’. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். தற்காப்புக் கலை, சண்டைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தை, பூரி ஜெகந்நாத் இயக்குகிறார்.

சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமான மைக் டைசன் இந்த படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.

மைக் டைசனுக்கு குரல் கொடுக்கும் பாலகிருஷ்ணா

இந்நிலையில் மைக்டைசனுக்கு தெலுங்கு டப்பிங்க், கொடுப்பது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பால கிருஷ்ணா என தெரியவந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் புகழ் உச்சியில் இருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா, அவர் மைக் டைசனுக்கு குரல் கொடுக்க போகிறார் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கபடுகிறது

From around the web