undefined

பிறப்புறுப்பு உட்பட உடம்பு முழுக்க டாட்டூ வரைந்து இளம்பெண் உலகசாதனை | வைரலாகும் வீடியோ!

 

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர், தன்னுடைய பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் அதிக எண்ணிக்கையில் டாட்டூ குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் வித்தியாசமான ரசனைகளுடன், வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று தங்களின் தோற்றங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். 

காதில் கடுக்கன் போட துவங்கிய பேஷன் அதன் பின்னர் மூக்கில், நாக்கில், தொப்புளின் என விரிவடைந்தது. ஆடைகளின் விஷயத்திலும் அப்படியே. தலை, உதடு, மூக்கு, காது, முடி, விரம், நகம் உள்ளிட்டவற்றால் மற்றவர்களிடம் இருந்து தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள மெனக்கெடுகிறார்கள். 

டாட்டூ பெண்ணின் வீடியோவைப் பாருங்க

அப்படி அமெரிக்காவில் இளம்பெண் ஒருவருக்கு விபரீதமான ஆசை எழுந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது உடலில் 99.98 சதவீதம் டாட்டூ படங்கள் ஆக்கிரமித்துள்ளது. அந்த மீதம் 0.02 சதவீதம் என்பது கண்ணுக்குள்ள குத்த முடியாது என்பதால் கருவிழிகள் தப்பித்தது. கை, கால், உச்சந்தலை, உதவு, நாக்கு, ஈறுகள், கண் இமைகளின் வெள்ளை வெளிப்புற அடுக்கு மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் எந்த பாகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை.

எஸ்பெரன்ஸ் லுமினெஸ்கா ஃபியூயர்ஜினா எனும் பிரிட்ஜ்போர்ட்டைச் சேர்ந்த இந்த இளம்பெண் முன்னாள் ராணுவ ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இருளை அழகுபடுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் தனது உடலை ஓவியம் போல மாற்றியமைத்துள்ளார். 

கின்னஸ் சாதனை படைத்தவர்களைப் பாராட்டி வளர்ந்த அவர், சாதனை படைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பெண்களின் ஆற்றல் திறன்களை வெளிப்படுத்த பச்சை குத்தும் சாதனையுடன் முயற்சித்ததாக அவர் கூறினார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா