மிக துல்லியமான தாக்குதல் | இஸ்ரேல் ராணுவத்தை பாராட்டிய இந்திய ராணுவ தளபதி!
நேர்த்தியான மிக துல்லியமான தாக்குதல் என்று இஸ்ரேல் ராணுவத்தை இந்திய ராணுவ தளபதி பாராட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு, இப்போது அது லெபனான் மற்றும் ஏமன் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலில் பலர் பலியாகியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ஐ.நா வலியுறுத்தி வருகிறது. லெபனானில் சமீபத்தில் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்தன.
40 ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திபேதி இஸ்ரேல் ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபோன்ற துல்லியமான தாக்குதல்களுக்கு பல ஆண்டுகளாக இஸ்ரேல் தயாராகி வருவதாக அவர் கூறினார்.
வெடிக்கும் பேஜர்களை உருவாக்குவதற்காக இஸ்ரேலிய இராணுவம் போலி நிறுவனங்களை உருவாக்கியது என்று அவர் கூறினார். மேலும், பேஜர்களை வெடிக்கச் செய்த இஸ்ரேலிய ராணுவத்தை இந்திய ராணுவ தளபதி பாராட்டினார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!