undefined

நாடு திரும்பினால் கைது... பிரபல கிரிக்கெட் வீரர் மீது கொலை வழக்கு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 

வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடையந்துள்ளனர். நாடு திரும்பினால் கைது என்கிற நிலையில் இருக்கிறார் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றன. 

கடந்த இரண்டு மாதங்களாக வங்கதேசத்தில்  நடந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் மகன் ஆகஸ்ட் 5ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு அடப்பூர் காவல் நிலையத்தில் நடந்து வருகிறது. அதாவது, டாக்காவில் ஆடைத் தொழிலாளியை கொலை செய்ததாக ஷகிப் அல் ஹசன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஷகிப் மட்டுமல்ல, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட மொத்தம் 500 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்காளதேச ஊடகச் செய்திகளின்படி, டாக்கா பெருநகர காவல் நிலையத்தில் ஷகிப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் நடந்த போராட்டத்தின் போது கொல்லப்பட்ட நபரின் தந்தை ரஃபிகுல் இஸ்லாம் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஷேக் ஹசீனாவின் வங்காளதேச அவாமி லீக் கட்சிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்கினார். வங்கதேசத்தில் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். ஷேக் ஹசீனாவுடன் உள்ள நெருக்கம் காரணமாக ஷாகிப் அல் ஹசன் மீதும் இதுபோன்ற வழக்குகள் தொடரலாம் என்று கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறியதால், வங்கதேசத்தின் முன்னாள் கேப்டன் மஷ்ரப் முர்தாசாவும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது வீட்டைத் தாக்கிய கும்பல் தீ வைத்து எரித்தது. இப்போது ஷகிப் அல் ஹசன் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது எதிர்காலத்தில் இந்த வீரருக்கு சிக்கலை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஷகிப் வங்கதேசத்துக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்தின் குல்னாவில் வீடு உள்ளது. இருப்பினும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். வங்கதேசத்தின் நிலவரத்தை பார்க்கும்போது வீரர் ஷகிப் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா