undefined

மீண்டும் விவாதத்திற்கு நான் ரெடி.. முன் வந்த கமலா ஹாரிஸ்.. பின் வாங்கிய ட்ரம்ப்!

 

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10ம் தேதி நடந்தது. பல்வேறு விஷயங்களில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அக்டோபர் 23 ஆம் தேதி, CNN தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று, கமலா ராரிஸ் மீண்டும் டொனால்ட் டிரம்புடன் விவாதிக்க ஒப்புக்கொண்டார். டிரம்ப் விவாதத்தில் பங்கேற்பார் என்று நம்புவதாகவும் கமலா ஹாரிஸ் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன்படி, "நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர். இரண்டாவது விவாதம் மிகவும் தாமதமானது" என்று கூறி அழைப்பை டிரம்ப் நிராகரித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!