undefined

“தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமிருப்பதால் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

 

தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக காணப்படுவதால், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விழாவை தொடக்கி வைத்து பேசுகையில், “பெண்களின் வளர்ச்சி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார். இன்று பெண்களுக்கு எல்லா கதவுகளும் திறந்து உள்ளன. தற்போது ஆண்களைவிட பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழத்தில் கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் விற்பனை தடையின்றி நடைபெறுகிறது.ஹெராயின், கொகைன் போன்ற போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி உள்ளனர்.

போதைப்பொருளை புழக்கத்தில் விடுவதற்கான சிண்டிகேட் தமிழகத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடல் எல்லைப் பகுதிகளில்  வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை மெட்ரிக் டன் கணக்கில் நமது கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்கின்றனர்.

போதை மருந்துகளால் வரும் பணத்தில் தான் ஆப்கானிஸ்தான் பொருளாதாரமே உள்ளது. எனவே, போதைப் பொருள் பிரச்சினையை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது மிகப்பெரிய பிரச்சினை. நாம் போதைப் பொருள் புழக்கத்தை குறைக்க நினைக்கக்கூடாது. அதை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகிறார்கள். பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி பேசுவதில்லை. நாம் போதை பொருட்கள் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

பெற்றோர்கள் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தாலும் குழந்தைகளிடம் பேச அவர்கள் நேர ஒதுக்க  வேண்டும். வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் சொல்வதை ஏற்க முடியாது. தற்போது பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். பெண்கள் வளர்ச்சி என்பது வெறுமனே தனிநபர் வளர்ச்சி இல்லை. அது தேசிய வளர்ச்சி. பெண்கள் வளர்ந்தால் தேசம் வளரும். உங்கள் கனவுகளை போதைப்பொருட்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் தடுக்கும். எச்சரிக்கையாக அவற்றை கடந்து வாழ்வில் முன்னேற வேண்டும்” என்று பேசினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை