undefined

 மலைக்கிராமங்களில் அவலம்.... கழுதை மற்றும் குதிரைகளில் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள்!

 

 இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி வாக்குப்பதிவு. இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது. டிஜிட்டல் இந்தியா, சந்திராயன் மூலம் சந்திர மண்டலத்துக்கே சென்றது, சூரியனுக்கு ஆதித்யா எல் 1 என செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் ஏவப்பட்டாலும் தமிழகத்தின் பல மலைக்கிராமங்களில் இன்னும் சாலை மற்றும் மின்சார வசதி கிடையாது என்பது தான் அப்பட்டமான உண்மை. அந்த வகையில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு மலை கிராமங்களில் தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படும் உபகரணங்கள் ஆகியவை இன்னும் குதிரை, கழுதைகள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது.


தேனி மாவட்டம் போடி குரங்கனியில் இருந்து   15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. காரிப்பட்டி மற்றும் ராசிமலை கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில்  ஏலக்காய், காப்பி, மிளகு போன்ற பணப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி கிடையாது. இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத நிலை தான். இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் குதிரை மற்றும் கழுதைகள் மற்றும் தலைச்சுமையாகத் தான் விற்பனை கொண்டு வரப்படுகின்றன. இந்த கிராமங்களில் ஒரு சில இடங்களில் சோலார் மின்வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நேரமும் பயன்பாட்டில் இருப்பதில்லை. தற்போது  நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன. இந்த கிராமங்களுக்கு முதல் நாளே குதிரைகளை தயார்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் முதல்நாளே அங்கு சென்று தங்க வேண்டிய நிலை தான்.  பெரும் சிரமங்களை  தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் சந்தித்து வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களான அடுக்கம், வெள்ளக்கவி கிராமங்களிலும் சாலை வசதிகள் கிடையாது.  அரசியல் கட்சியினரிடம்  மலைகிராம மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனையான சாலை, குடிநீர் வசதிகளையாவது செய்து தரவேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்