வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்த மேயர்... உதயநிதி பிரச்சாரத்தில் பரபரப்பு!

 

 தமிழகத்தில் ஒரு புறம் தாங்க முடியாத வெயில் , மறுபுறம் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் . இதனால் பொதுமக்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி வருகின்றனர். மக்களவை தேர்தலை  முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.


இந்த பிரச்சார நிகழ்வில்  உதயநிதி ஸ்டாலின்,  கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 1 கோடியே 60 லட்சம் மகளிர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1 கோடியே 16 லட்சம் பயனர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ளவர்களுக்கு மறுபரிசீலணை நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததும் 6 அல்லது 7 மாதங்களில் வழங்கப்படும்.  
இந்த பிரச்சார கூட்டத்தில்  கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நண்பகல் நேரத்தில் பிரச்சாரம் தொடங்கிய போது  வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும் ஏராளமான பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 


உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் வாகனம் பின்னால் நின்று கொண்டிருந்த கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், வெயில் தாங்க முடியாமல் தலைசுற்றி கீழே சரிந்தார்.  உடனடியாக அங்கிருந்த நிர்வாகிகள் அவரைத் தாங்கி பிடித்து ஓரமாக அமர வைத்து தண்ணீர் வழங்கினர்.   கரூர் மாவட்டத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை இருப்பதால்  உச்சி வெயிலில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலை சுற்றி கீழே விழுந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்