தம்பிகள் பதற்றம்... சீமானுக்கு அடுத்த சிக்கல்... இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் நடிகை விஜயலட்சுமி!

 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும்  இரண்டு வார காலங்களே உள்ள நிலையில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து அவரது பிரச்சாரத்தைத் தடுக்கும் விதமாகவும், கட்சிக்குப் பின்னடைவாகவும் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.கட்சியின் விவசாயி சின்னம் அவருக்கு வழங்க  மறுக்கப்பட்டு, தெலுங்கானாவில் இருக்கும் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர், அந்த கட்சி மொத்தமே 5 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.  இந்நிலையில், சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி இது வரையில் ஆஜராகாததால், இன்று ஏப்ரல் 2ம் தேதி இறுதி வாய்ப்பாக நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இறுதி வாய்ப்பு என்று நீதிமன்றம் எச்சரித்திருந்ததால், இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

 இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை, அதன் பின்னர் அவர் ஆஜராகவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நடிகை விஜயலட்சுமி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்குவதாகக் கூறி, விசாரணையை இன்று ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளி வைத்து அப்போது உத்தரவிட்டிருந்தார். அதே போன்று நடிகை விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் என்றும் நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார். அதனால் இன்று நேரிலோ அல்லது காணொலி காட்சி வாயிலாகவோ நடிகை விஜயலட்சுமி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்