சிதம்பரத்தில் பரபரப்பு... விசிக, பாமக கட்சியினர் திடீர் மோதல்!
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் வேலூர் மாநகர முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் சார்பில் சந்திரகாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜான்சிராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சமுதாய நல்லிணக்க தொடர்பு அமைப்புத் தலைவர் குரு.சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்து வந்தனர். போலீசாரிடம் முன் அனுமதி பெறாமல் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்ததாக குரு.சுப்பிரமணியன், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதே போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், பாமகவினரும் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி, நகர்மன்ற திமுக உறுப்பினர் சி.க.ராஜன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த இரு கோஷ்டியினரையும் தடுக்க முயன்ற தூய்மைப் பணியாளர் திலகவதியும் தடுக்க முயன்ற போது தாக்கப்பட்டதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிதம்பரம் நகர போலீசார், துண்டுப் பிரசுரம் வழங்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 3 பேரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். உடனே இது குறித்து தகவலறிந்த பாமக, பாஜகவினர் காவல் நிலையத்தில் சூழ்ந்தனர். இன்னொரு பக்கம் திமுக, விசிக கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!