6வது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

 

 இந்தியாவில்  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை   7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக  ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியையும் அரசியல் கட்சிகள்  அறிவித்துள்ளன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


அந்த வகையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக இதுவரை 5 முறை தமிழகம் வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அதன்படி, ஏப்ரல் 9ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்

அத்துடன் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம்  குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.  ஏற்கனவே  ஜனவரியில் 2 முறை, பிப்ரவரி 27, மார்ச் 4ம் தேதி, மார்ச் 18ம் தேதி என 5 முறை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.   அதன் தொடர்ச்சியாக, 6வது முறையாக, தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்