undefined

பிரச்சார பொதுக்கூட்டத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத பிரேமலதா... தொண்டர்கள் சோகம்!

 

 தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைதேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றன. அந்த வகையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் வாணாபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அங்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நீங்க எல்லாம் வந்திருந்தீங்க.

இரண்டு நாள் யாருமே சாப்பிடாமலேயே டிவி முன்பு நீங்கள் காட்டிய அன்பு, பல மடங்கு. கவலைப்படாதீங்க... விஜயகாந்த் விட்டுட்டு போயிட்டாரு என நினைக்காதீர்கள். உங்கள காப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.நானும், எனது 2 மகன்களும்  உங்களுக்காகவே இருப்போம். இனி ஒவ்வொரு தொண்டர்களுக்காகவும்  என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். அப்போது கூட்டத்தை பார்த்து பிரமேலதா கண் கலங்கினார்.


ரிஷிவந்தியம் வந்தாலே எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. இந்த தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் தொகுதி மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது என கண்கலங்கினார். இவர் கண்கலங்கியதை பார்த்ததும் தொண்டர்களும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்