கைச்செலவுக்கு கூட காசில்ல... தேர்தல் அதிகாரிகளிடம் கதறும் வடமாநிலப் பெண்!

 

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக  நடைபெற உள்ள நிலையில்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. கையில் எடுத்து செல்லும் பணத்திற்கு கணக்கு வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும்.. அந்த வகையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வடமாநில பெண் ஒருவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை திரும்பக்கேட்டு, தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்த பெண் கதறி அழுதார்.

இச்செயல் அப்பக்கமாக வந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, டபுள் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  காரில் வந்த ஒரு குடும்பத்தினர், உரிய ஆவணங்கள் இன்றி ரூ69,400 ரொக்கத்தை பணமாக வைத்திருந்தனர். உடனடியாக அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அந்தப் பெண், “நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பிறகு  அங்கிருந்து வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தோம். எங்களுக்கு இந்த நடைமுறை தெரியாது. இப்போது கையில் செலவிற்கு கூட பணமில்லை. அதனால் எங்களது பணத்தை திரும்பக் கொடுத்து விடுங்கள்” எனக்கேட்டு கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது.  


தேர்தல் பறக்கும் படையினர் இப்படி சிறு குறு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக எடுத்து செல்பவர்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லை. ரொக்கமாக  பணத்தை யார் எடுத்து சென்றாலும் தீவிர விசாரணைக்குப் பின்பே பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவனிக்குமா தேர்தல் ஆணையம்?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்