undefined

ஓபிஎஸ்க்கும், மன்சூருக்கும்  பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு!

 

 தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருடன் இத்தொகுதியில் 5 பன்னீர் செல்வங்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ்  அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார்.  
ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன்  ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர்களை கொண்ட 5 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். 


இந்நிலையில் தான் வாளி அல்லது திரட்சை சின்னத்தை கேட்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.  இதனால் சின்னங்களை சீட்டுப்போட்டு குலுக்கி வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலா பழம் சின்னம் கிடைத்துள்ளது. 
மற்ற பன்னீர் செல்வங்களுக்கு என்னென்ன சின்னங்கள்?
சோலை அழகுபுரம் ஒய்யாத் தேவர் மகன் ஓ பன்னீர் செல்வத்திற்கு திராட்சை சின்னம்  

 


ராமநாதபுரம் ஒய்யாரம் மகன் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர் சின்னம் ஒதுக்கீடு  
கங்கை கொண்டான் மலையாண்டி மகன் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பட்டாணி சின்னம் ஒதுக்கீடு  
வாகை குளம்  ஒச்சத்தேவர் மகன் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாளி சின்னம் ஒதுக்கீடு  
 இதே போல் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்