undefined

பழனியில் தங்கத்தேர்... திருச்செந்தூரில் தரிசனம்... இன்று விசாரணைக்கு வருகிறது ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு!

 

இது நாள் வரையில் ஜெயலலிதாவுக்காக கோயிலில் வேண்டிக் கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம், இந்த முறை பழனியில் பிரதமர் மோடிக்காக தங்கத் தேர் இழுத்ததாக கூறினார். திருச்செந்தூரில் மோடிக்காக தரிசனம் செய்ததாகவும் கூறியிருந்த ஓபிஎஸ் சொத்துக் குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஏற்கெனவே அவரிடம் இருந்து அதிமுக முழுமையாக கை நழுவி போய் விட்டது. நிரந்தரமாக இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கொடியையும் ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார். 

கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தார். ஓ.பன்னீர்செல்வம். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப்பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அதிமுக ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து  2012-ல் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். 

இந்த வழக்கில் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் அன்றைய தினம் ஆஜராகி வாதிட இயலாததால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26ம் தேதிகளுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வருவது ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!