கரையேறுவாரா துரை வைகோ... திருச்சியில் பரிதாபம்!?
திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ நேற்று அவர் கலைஞர் அறிவாலயத்தில் கதறியழுத காட்சி அனைவரும் கலங்க வைத்தது இந்நிலையில் என்னதான் நடந்தது என அவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அதிருப்தி பெருகி வருவதாக ஆதங்கப்படுகிறார்கள் அவர்கள் கட்சியினரே.
முதலாவதாக அறிவாலய பேச்சுவார்த்தையில் இரண்டு தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைக்க மறுக்கப்பட்டு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாகவும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கறார் காட்டியதாகவும் சொல்கிறார்கள், இரண்டாவதாக சிறுகனூரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வளவள என்று பேசிக்கொண்டிருந்தவரை தலைவர் பேசவேண்டும் பேச்சை சட்டுனு முடிங்க என கூறியதை அங்கே செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் நன்றாக அறிவார்கள்.
அடுத்த நாள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த துரை வைகோ கோவிலைவிட்டு வெளியே வந்ததும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என கேட்க அதற்கு உங்கள் தொகுதியில்தான் ஸ்ரீரங்கமும் வருகிறது ஆகவே வேண்டாம் எனக்கூற எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் எனக்கூறியிருக்கிறார் அதனையும் உடன் சென்றவர்கள் ரசிக்கவில்லை என்கிறார்கள்.
-
அடுத்த பிரச்சனையாக கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டணி கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் துரை வைகோ கருப்பு சட்டை அணிந்து வர அதனை கூட்டணிக் கட்சிப்பிரமுகர்கள் சுட்டிக்காட்டி இப்படி முதல் கூட்டத்திலேயே அதுவும் வாக்கு கேட்க நடக்கும் கூட்டத்தில் கருப்பு சட்டை தேவையில்லை சட்டையை மாற்றிக்கொண்டு வரச்சொல்லவும் என எவ்வளவோ எடுத்துக்கூறியும் மறுத்துவிட்டாம் அதனால் திமுகவின கொந்தளித்து விட்டார்களாம் மலைக்கோட்டை மாவட்டத்தை தன்னுடைய கண்ணசைவில் வைத்திருக்கும் அமைச்சர் நேருவிற்கு முன்னாலயே நான் போட்டியிடவிட்டாலும் நாற்பது தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வோம் என கண்ணீர் விட்டு கதறியதை திமுகவினர் ரசிக்கவில்லையாம், அட போட நம்ம அமைச்சர் மகன் பக்கத்து மாவட்டத்தில் நிற்கிறார் அவரை அங்கே சென்று ஆதரித்து பெரும் வெற்றியடைச்செய்வோம் எனக்கூறி இருப்பதாக திமுக வட்டாரத்தில் தகவல் சொல்கிறார்கள். இந்த வயதில் இவ்வளவு கோபம் கூடாது அதுவும் அரசியலில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் என வருத்தப்படுகிறார்கள், இன்னொரு தரப்போ சின்னம் ஒதுக்காவிட்டாலோ கிடைக்காவிட்டாலோ இவர் என்ன செய்யப்போகிறார் என முணு முணுத்துக்கொண்டே கிளம்பி சென்றனர்.லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!