வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ... சென்னையில் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை!

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி  மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக வருமானவரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 


இந்த கட்டுப்பாட்டு அறைக்கு சென்னையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வசித்து வரும் ஹிந்தாராம் சவுத்ரி என்பவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இவர் சவுத்ரி எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் மொத்த கடை நடத்தி வருகிறார். 


சென்னை  கொண்டித்தோப்பு சக்கரை செட்டி தெரு, ரைஸ்மில் தெரு ஆகிய பகுதியில் உள்ள இவரது  வீடு அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் சென்னை ஓட்டேரி நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்