வேகமெடுக்கும் பிரச்சாரம்... என்ன நடக்க போகுதோ...? தமிழகம் வருகிறார் அமித்ஷா!

 

ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல் திருவிழாக்கள் நிறைவடைந்த நிலையில், பல இடங்களில் பலத்த சர்ச்சைகளுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரத்தில் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்