undefined

 ஆ.ராசாவின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு... தொண்டர்கள் அதிர்ச்சி!

 

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. நேற்றுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று அவை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தமிழகத்தில்  திமுக அதிமுக, பாஜக , நாம் தமிழர் என 4 முனை போட்டிகள் நிலவுகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் அக்கட்சியின் சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில்  ஆ. ராசா போட்டியிடுகிறார்.


இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் எல் முருகனும், அதிமுக கூட்டணியின் சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால்  மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். இன்று நடந்து வரும் வேட்பு மனு பரிசீலணையில் திமுக வேட்பாளர் ஆ ராசாவின் வேட்பு மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஆ ராசா தாக்கல் செய்த வேட்பு மனுவில் சில பிழைகள் இருப்பதாகவும், அதனால்  வேட்பு மனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்