சென்னையில் பரபரப்பு... முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, சென்னையில் அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வரும் நிலையில், முதல்வர் இல்லம் உட்பட 7 இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ளது. இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் வீடு உட்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் முதல்வர் வீட்டிற்கு மோப்ப நாயுடன் வந்த அதிகாரிகள் சோதனை செய்ததில் அது புரளி என தெரிய வந்துள்ளது. மேலும் மிரட்டல் விடுத்த நபர் உதகையை சேர்ந்த கணேசன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!