undefined

மகாளய பட்சம் | வீட்டிலிருந்தே பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம்!

 
இன்று புரட்டாசி மாத அமாவாசை தினம். இன்றைய தினத்தை நாம் மகாளய அமாவாசை என்கிறோம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு உகந்த தினங்களாக இந்த மகாளய பட்ச தினங்களைக் கூறுகிறோம். மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் தர மறந்திருந்தாலும் இன்றைய தினம் மறக்காமல் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய  கடமைகளை செய்யுங்க. அதனால் தான் மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்கிறார்கள். 

பித்ருக்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் குறித்து பார்க்கலாம் வாங்க. இதற்காக நீங்க ரொம்ப எல்லாம் சிரமப்பட வேண்டாம். உங்க வீட்டில் இருந்த படியே சிரமம் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரலாம்.

மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு விரதத்தைத் தொடங்கி விட வேண்டும். காலையில் முழு விரதம் இருந்து மனதில் வீட்டு பெரியோர்கள், முன்னோர்களை வணங்கி மதியம் சாப்பாடு தயாரித்து சூரியன் வந்ததும் படையலிட வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது அவசியம். இப்படி செய்வதால் பித்ருக்களின் சாபம் நீங்குகிறது. அதன் பிறகு வழிபட்டு மதியம் உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். முன்னோர்களை நினைத்து நீங்களாகவே எள்ளும், தண்ணீரும் இறைத்தாலே அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!