undefined

 முட்டை சாப்பிட்ட போது  மூச்சுத்திணறி பலி... பெரும் சோகம்!   

 

  
 

 
தெலங்கானா மாநிலத்தில் நாகர் கர்னூல் மாவட்டம் வட்டமோன் கிராமத்தில் வசித்து வந்தவர் திருப்பத்தையா. இவருக்கு வயது 48.இவர், சொந்த வேலையாக லிங்காளா கிராமத்திற்கு சென்றிருந்தார். தனது வேலை முடிந்ததும் சாப்பிடலாம் என யோசிக்கும் போது தான் காலையிலிருந்தே தான் ஒன்றுமே சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.  
இதனால் அங்குள்ள சென்னாம்பள்ளி சதுக்கம் பகுதியில், தள்ளுவண்டி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முட்டையை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பசி மயக்கத்தில் அவர் முழு முட்டையை முழுவதுமாக ஒரே வாயில் திணித்து சாப்பிட முயற்சி செய்தார்.  இதனால் முட்டை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர் மயங்கி சரிந்தார்.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர்  திருபத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதியவர் சாப்பிட்ட முட்டை, அவரின் தொண்டையில் சிக்கியதால் உயிரிழப்பு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவசரத்தில் உணவை சாப்பிட்டு, அரக்க பறக்க ஓடுபவர்களுக்கு இது  ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!