undefined

மிளா தாக்கி இளைஞர் பலி... குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி!

 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மிளா தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி வனக்கோட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட பொத்தையடி பகுதியில் 21.03.2024 அன்று தனபால் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மிளா மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பாக தகவலறிந்ததும் வனத்துறை தானாக முன்வந்து விசாரணை செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10லட்சம் கன்னியாகுமரி வனக்கோட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த தனபால் மனைவி நிர்மலாவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசேலையினை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் வழங்கினார். மேலும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் வன உயிரினங்களால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளுக்கு தலா 10 லட்சம் வீதம் 30 லட்சமும், பயிர் சேதம் மற்றும் கால்நடைகள் சேதம் ஏற்பட்ட 14 விவசாயிகளுக்கு ரூ.2,93,483 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!