undefined

தொடரும் சோகம்...  ஆன்லைன் ரம்மியால்  இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 

  
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்  சிலோன் காலனி பகுதியில் வசித்து வருபவர்  அருண்குமார். இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில்  இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் கையில் இருந்த எல்லா பணமும் காலி.  வழக்கம் போல்   நேற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20000 இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து அருண்குமார் இருந்துள்ளார்.

 


இதனையடுத்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்பு வீட்டில் மேற்கூறையில் இருந்த கொக்கியில் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவில் எழுந்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவரது உடலை  மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். அருண்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து   காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

 


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆன்லைன் ரம்மி  விளையாடி பணத்தை இழந்த நபர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  ஆன்லைன் ரம்மியை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!