undefined

இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவில் அரிவாளுடன் கெத்து காட்டிய இளைஞர்கள் கைது!

 

உஷார் மக்களே...  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாகசங்களில் ஈடுபடாதீங்க. இது போன்ற செயல்கள் எல்லாம் சாகசங்களும் கிடையாது. படிக்கிற வயசுல தவறான முன் உதாரணமாகவும் இருக்கீங்க. இப்படி வீடியோ பதிவிடறவங்கள் ஏற்கெனவே தங்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிக்கிட்டு வன்முறை, குற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். இதைப் பார்த்து நீங்களும் உங்க எதிர்காலத்தைப் பாழாக்கிக்காதீங்க. .

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாளுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் இரண்டு இளைஞர்கள் பதிவிட்டனர். இது குறித்து ஆறுமுகனேரி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் தலைமையில் உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த மீராஷா மரைக்காயர் மகன் சேகு நூர்தீன் (24), சுனாமி காலனியை சேர்ந்த சகாப்தீன் மகன் முத்து மொகுதூம் என்ற ஆசிஃப் அலி ­(19) ஆகியோர் ரீஸ் பதிவிட்டது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து அரிவாள், வாள், இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். இவர்களில் சேகு நூர்தீன் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!