25 வயதுக்கு கீழ் வெற்றி பெற்ற இளம் எம்பிக்கள்!

 
 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 25 வயதுக்கு கீழ் உள்ள 4 பேர் வெற்றி அடைந்துள்ளனர். அதன்படி  காங்கிரஸ் கட்சியின் சஞ்சனா ஜாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் ஷாம்பவி சவுத்ரி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரிய சரோஜ் ஆகியோர் எம்.பி.,க்களாக வெற்றி பெற்றுள்ளனர்.  

சஞ்சனா ஜாதவ்

ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று  வெற்றி பெற்ற   சஞ்சனா ஜாதவ் வயது 25. இவர்  கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.  ராஜஸ்தானில் போலீஸ் ஏட்டாக  பணிபுரியும் கப்தன் சிங்கை  திருமணம் செய்துள்ளார்.
ஷாம்பவி சவுத்ரி
பீஹாரில் நிதீஷ்குமார் அமைச்சரவையில்  ஐக்கிய ஜனதா தளத்தின் அசோக் சவுத்ரியின் மகள் தான் ஷாம்பவி சவுத்ரி.  25 வயதாகும் இவர்  பீஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் களமிறங்கி காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, இளம் வயது வேட்பாளர் என பிரதமர் மோடி இவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  

பிரியா சரோஜ்

சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட பிரியா சரோஜின் தந்தை டூபானி சரோஜ் ஏற்கனவே 3 முறை எம்.பி., ஆக இருந்தவர். இவர் மச்சில்சாஹர் தொகுதியில் 35,850 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  

புஷ்பேந்திர சரோஜ்

சமாஜ்வாதி கட்சி சார்பில் கவுசாம்பி தொகுதியில் போட்டியிட்டவர் புஷ்பேந்திர சரோஜ். 25 வயதாகும் இவர் 1,03,944 ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவர், சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இந்தர்ஜித் சரோஜின் மகன். இவருடைய தந்தை 2019ல் இதே  தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், மகன் தற்போது வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  புஷ்பேந்திர சரோஜ், லண்டன் குயின் மேரி பல்கலையில் கணக்கு பதிவியல் மற்றும் நிர்வாகம் குறித்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்தவர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!