undefined

 'என் அப்பா யாரு தெரியுமா?” போதையில் சிரித்தபடியே கார் ஏற்றி தந்தை -  மகளைக் கொன்ற இளம்பெண்!

 
 

போதையில், ‘என் அப்பா யாரென்று உனக்குத் தெரியாது' என்று கூறியபடியே பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் தனது அதிவேக எஸ்யூவி காரை தந்தை, மகள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தி விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து எடுக்கப்பட்டது. 32 வயதான நடாஷா டேனிஷ்  கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று தனது எஸ்யூவி காரில் இந்த விபத்தை ஏற்படுத்தினார். இச்சம்பவத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். 

இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகளை நடாஷா தாக்கி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரையும் சேதப்படுத்தினார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். அவரது காரும் சேதமடைந்தது. 

பிரபல தொழிலதிபர் டேனிஷ் இக்பாலின் மனைவி நடாஷா. இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், பலரும் நடாஷாவின் நடத்தைக் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பிறகு எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், சிரித்தப்படியே அவர்களிடம், 'என் தந்தை யார் என்று உங்களுக்குத் தெரியாது’ என்று கூறுகிறாள். 'ஒரு மனிதனையும் அவனுடைய மகளையும் கொன்ற பிறகு அவள் புன்னகையைப் பாருங்கள்' என்று சிலர் வீடியோவின் கீழ் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு அவர் தனது குடும்பத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார் என்று சிலர் சுட்டிக்காட்டினர். விபத்தை ஏற்படுத்திய பிறகு அவள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு சில மனநல கோளாறுகள் இருப்பதாகவும், ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடாஷாவுக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அந்த பெண் தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை