undefined

பேருந்து நிலையத்தில் இளம்பெண் குத்தி கொலை... பகீர் சிசிடிவி காட்சிகள்....!!

 

திருப்பூர் காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும்  பயணிகள் கூட்டம் அதிகம் கானப்படுவது வழக்கம். நவம்பர் 1 ம் தேதி இரவு 10 மணிக்கு  கோவில் வழி பகுதியில் வசித்து வரும்  சாந்தி என்பவர் மினி பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் பின்புற கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதனால் அந்த பெண் வலியால்   அலறி துடித்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியால் குத்திய கணேசனை பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


இதனை தொடர்ந்து சாந்தியை திருப்பூர் அடுத்த கோவில்வழி பகுதியில் குடியமர்த்திய கணேசன் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபடி சாந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அறிந்த கணேசன் கடந்த 1-ம் தேதி இரவு திருப்பூருக்கு வந்துள்ளார்.அப்போது, பேருந்து நிலையத்தில் சாந்தி வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது  குறித்த  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!