undefined

 22 வயசு தான்... வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை! 

 


கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருபவர் 22 வயது பூஜா. இவர்   ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 2022ல் சுனிலுடன்  திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் பெங்களூரில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் திருமணத்தின் போது சுனிலுக்கு பெண் வீட்டில் இருந்து வரதட்சணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன் மனைவியிடம் சுனில் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்தார்.  ஆனால் பூஜா வரதட்சணை கொடுப்பதற்கு ‌ மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் சுனிலின் சகோதரி உட்பட குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதனால் பூஜா  மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இது குறித்து பூஜா தன் பெற்றோரிடம் வேதனையுடன் தெரிவித்த பிறகு  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ‌ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!