புகைபிடித்தலை நிறுத்த முடியாது.. விமானத்தில் அடம் பிடித்த பயணியை கைது செய்த அதிகாரிகள்
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் விமானத்தில் புகைபிடித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 10.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 174 பயணிகளுடன், விமானம் ஓடுபாதையில் புறப்படுவதற்கு முன்பு பயணிகள் சீட் பெல்ட்டை அணியுமாறு கூறப்பட்டது.
அதையடுத்து, பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளதா என விமானப் பணியாளர்கள் சோதனையிட்டபோது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (30) என்ற பயணி, இருக்கையில் அமர்ந்து புகை பிடித்துள்ளார். இதைப் பார்த்த பிறகு, விமானப் பணிப்பெண்கள் விமானத்திற்குள் புகைபிடிக்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் சிகரெட்டை அணையுங்கள் என்றார்கள். மேலும், அவர் எப்படி பாதுகாப்பு சோதனையை புறக்கணித்து விமானத்திற்குள் சிகரெட்டை கொண்டு வந்தார் என்று கேள்வி எழுப்பினர். ஆனால், என்னால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியாது என்று கூறி அந்த பயணி தொடர்ந்து புகைபிடித்துள்ளார். சக பயணிகளின் பேச்சை அவர் கேட்கவில்லை.
இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். உடனே விமானத்தின் கதவுகள் திறந்தன. விமானத்தில் ஏறிய பாதுகாப்பு அதிகாரிகள், புகைபிடித்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அவரது உடமைகளும் அகற்றப்பட்டன. அவரது மலேசியா பயணமும் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 173 பயணிகளுடன் இரவு 11.07 மணிக்கு விமானம் புறப்பட்டது.
இதனிடையே, விமானத்தில் இருந்து ஆப் லோடு ஏற்றிய ஆறுமுகத்தை, இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் ஆறுமுகம் வேலைக்காக மலேசியா சென்றது தெரியவந்தது. பின்னர் ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதியில் புகைபிடித்ததாகவும், விமான பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!