undefined

 ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் யோகிபாபு!

 
 

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் இடம் இன்னமும் காலியாகவே இருக்கிறது. அந்த இடத்தை நிரப்ப பல நடிகர்கள் போட்டியிட்ட நிலையில் சந்தானமும் நிலையாய் நிற்காமல் ஹீரோவாக ஆசைப்பட்டதில் வெற்றிடத்தில் இன்னும் அதிக வெறுமை தமிழ் திரைப்படங்களின் வியாபாரத்திலும் எதிரொலித்து வருகிறது. 

இதில் கிடைத்தவரை வாய்ப்புகளை அள்ளுவோம் என்று ஒரு டஜனுக்கும் அதிகமான காமெடி (?!) நடிகர்கள் தங்களது திறமைகளைக் காட்டி வருகின்றனர். மக்கள் பெரியளவில் கொண்டாடவில்லை என்றாலும் நடிகர் யோகிபாபுவின் காட்டில் பணமழை. அடுத்தடுத்து படங்கள் வரிசைக்கட்டி யோகிபாபு படத்தைப் போஸ்டரில் போட்டாலே வியாபாரமாகி விடுகிற அளவில் டாப் ஸ்டாராக இருக்கிறார். 

இந்நிலையில் தமிழ், இந்தியைத் தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் நடிகர் யோகி பாபு.

நடிகர் நெப்போலியனை 'டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குநர் டெல் கே. கணேசன் தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார். 

அவரது அடுத்த படைப்பான‌ 'டிராப் சிட்டி'யில், தமிழ் நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபுவை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் ஹாலிவுட்டுக்கு கணேசன் அறிமுகப்படுத்துகிறார். இதில் யோகி பாபு ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடியிருக்கிறார். 'ட்ராப் சிட்டி' படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ’ஜீஸி’ ஜென்கின்ஸ், யோகி பாபு, நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைத்துறையின் பின்னணியில் கருத்தை சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது. சவாலான இசை துறையில் ஒரு இளம் கலைஞனின் போராட்டத்தை திரைப்படம் காட்டுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!