நாளையும், மறுநாளும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்!

 

 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூலை 12  நாளையும், மறுநாளும்  தமிழகத்தில் 5  மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக  34 டிகிரி செல்சியஸ் நிலவக்கூடும்.  தென் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 15ம் தேதி 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதனையடுத்து  மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!