வாவ்.. கரை ஒதுங்கிய கடற் கன்னி.. வியப்பில் மக்கள்..!

 
கடற்கன்னி போன்ற அமைப்பை கொண்ட உயிரினம் தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடற்கன்னிகள் போன்ற உயிரினங்கள் உண்மையா, பொய்யா என்பதை தாண்டி குழந்தைகளுக்கு இது போன்ற கடற்கன்னிகளும், அவை மனிதர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவுவது குறித்த தகவல்களும் மிகவும் பிடித்தமானவை.

தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. இதன் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Porl Moresby). இந்நிலையில் நேற்று, அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ (New Irelanders Only) எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டது.

இது அச்சு அசலாக கடற்கன்னி போன்று இருப்பதால் ஒருவேளஒ உண்மையான கடற்கன்னி இப்படி தான் இருக்குமோ என மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது.