undefined

வாவ்.. ஒரே வாட்ஸ்அப்பில் இரட்டை தொலேபேசி எண்கள்.. புதிய அப்டேட் கொடுக்கும் மெட்டா..!

 
இரட்டை தொலைபேசி எண்களை வாட்ஸப்பில் இணைக்க புதிய அப்டேட்டை மெட்டா நிறுவம் வெளியிடப்பட உள்ளது.

உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர். இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.அந்த வகையில் தற்போது புதிய ஒரு அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

WhatsAppக்கான இரட்டை தொலைபேசி எண்களை எவ்வாறு செயல்படுத்துவது? 

1. உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.

2. மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து, settings இற்குள் செல்ல வேண்டும்.

3. உங்கள் சுயவிவரப் பெயருக்கு அடுத்துள்ள கீழ்தோன்றும் அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.

4. வாட்ஸ்அப் கணக்கில் மற்றொரு மொபைல் எண்ணைச் சேர்க்கவும்.  இதன் மூலம் உங்கள் வாட்ஸ் அப்பில் இரண்டு தொலைபேசி எண்களை பயன்படுத்த முடியும்.