’பிரபல நிறுவனங்களை மிரட்டும் புழு’.. சாக்கோஸில் இருந்த புழு.. வைரலாகும் பகீர் வீடியோ..!

 

சமீபத்தில் டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கெலாக்ஸ் சாக்கோஸ்  பேக்கெட்டில் புழு ஒன்று இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புழுக்கள் உள்ள இந்த சாக்லேட்டுகளை சாப்பிட்டால் கூடுதல் புரதம் கிடைக்குமா என்று இன்ஸ்டா பயனர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், கெலாக்ஸ் இந்தியா நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. நிறுவனத்தின் பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

உங்கள் கவலையைப் புரிந்துகொள்ள எங்கள் நுகர்வோர் விவகாரக் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும். உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு இன்பாக்ஸ் செய்யவும்."இந்நிலையில், இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் கூறினார் “பல ஆண்டுகளுக்கு முன்பு இதே மோசமான தயாரிப்பில் இருந்து உயிருள்ள புழுக்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் அப்போது சமூக ஊடகங்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை. அதனால் சாக்கோஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். ஆனால் அவர்கள் இன்னும் புழுக்களை விற்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.மற்றொரு பயனர், "நான் இந்த வீடியோவைப் பார்த்த தருணத்தில்.. என் சமையலறையில் கெலாக்ஸ் பாக்கெட்டைத் தேடினேன். நல்ல வேளையாக, அதன் காலாவதி தேதியை இன்னும் கடக்காததால், நான் எந்த புழுவையும் கண்டுபிடிக்கவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்