மூன்றாம் உலகப்போரா..? அமெரிக்க போர் கப்பலை தாக்கிய ஈரான் ஏவுகணை..!

 
ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கடற்படை கப்பல் ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்க போர்க்கப்பல் இடைமறித்துள்ளது.

ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் இருந்த அமெரிக்க போர் கப்பலை நோக்கி வீசப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தோராயமாக 2-3 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. யுஎஸ்எஸ் கார்னி போர் கப்பலை நோக்கித்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி படையால் ஏவப்பட்ட மூன்று தரைவழி தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை கடந்த 24 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தி உள்ளோம். இதனால் மத்திய கிழக்கு கடல் பகுதிகளில், ஏமன் கடல் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது .
இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதெல்லாம் சேர்ந்து 3ம் உலகபோராக வெடிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது. கையில் அணு ஆயுத சூட்கேசோடு.. சீனாவிற்கு போன ரஷ்யா புடின்.. இஸ்ரேல் போரில் திடுக் ட்விஸ்ட்.. பதற்றம் சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக இந்த படைக்கு பண நிதியாக, ஆயுத் தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் ஈரான் தலையிட்டு வரும் நிலையில் ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், இஸ்ரேல் ஆட்சி மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறோம். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானையும் தொடர்புபடுத்துபவர்கள் தவறாக நினைக்கிறார்கள். நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம். இதை செய்தவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் செய்தது பெரிய சாதனை. இது மிகவும் வலிமையான மெசேஜ். இஸ்ரேல் நசுங்கிவிட்டது. இஸ்ரேல் பெரிய அடி வாங்கிவிட்டது. இஸ்ரேல் இனி முன்னேறவே முடியாது. இஸ்ரேல் எழுந்து வர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்தி இருக்கிறோம், என்று ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது .