undefined

மாஸ்... உலகக்கோப்பை முன்னோட்ட வீடியோ...!!

 

2023 உலக கோப்பைக்கான முன்னோட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆக இந்திய கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில்  காமிராவை 360 டிகிரி  சுழற்றி  ரோஹித் ஷர்மா, பும்ரா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி, அஸ்வின், ஷார்துல் தாக்கூர், இஷான் கிஷனின் குறும்புத்தனமான சேட்டைகளை பதிவு செய்துள்ளனர்.  


இந்திய கிரிக்கெட் அணியினர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் பதிவில், விராட் கோலி குறித்த கேள்வியே கமெண்ட்டில் நிரம்பி வழிகிறது. கோலி இல்லாமல் இந்த ரீல்ஸ் முழுமை பெறவில்லை ,  எங்கே எங்களது ராஜா எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கோலி கலந்து கொள்வது குறித்து எதையும்  உறுதியாக சொல்ல முடியாது. அதே நேரத்தில்  பயிற்சி ஆட்டத்தில்   இந்திய அணியுடன் இருக்க வாய்ப்புள்ளதாக   தெரிவித்துள்ளது