undefined

   உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தொடக்கம்!  

 


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில்  தொடங்கியுள்ளது. இன்று தொடங்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் டிசம்பர் 14ம் தேதி வரை மொத்தம் 14 சுற்றுகளாக கிளாசிக்கல் முறையில் நடைபெற உள்ளது.உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டின் குகேஷ் சீனாவின் டிங் லிரேன் இருவரும்  மோதுகின்றனர்.138 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேருக்கு நேர் மோதுவது குறிப்பிடத்தக்கது.  சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. டி. குகேஷ் உலக செஸ் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றிருந்தார்.

இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதும், 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது உலகம் முழுவதும்  அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குகேஷ் வெற்றி பெற்றால், மிக இளம் வயதில் உலக செஸ் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை புரிவார். 
 இந்தத் தொடர் 14 சுற்றுகளை கொண்டதாக அமைந்துள்ளது. இதில் ஒரு சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். போட்டி டிராவில் முடிந்தால் அரைப்புள்ளி மட்டுமே கிடைக்கும். எந்த வீரர் முதலில் 7.5 புள்ளிகளை பெறுகிறாரோ, அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார். ஒரு வேளை 14 போட்டிகளுமே டிராவில் முடிவடைந்து, இருவருமே தலா 7 புள்ளிகளைப் பெற்றிருந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டை-பிரேக் முறை கடைபிடிக்கப்படும்.டை-பிரேக் தேவைப்பட்டால் டிசம்பர் 13ல் நடைபெறும்.இந்த போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும்.


இந்த உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் மொத்தமாக ரூ.20.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு தனியாக ரூ.1.67 கோடி பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டிகளை ஃபிடே யூடியூப் சேனலில் காணலாம். பட்டம் வெல்பவருக்கு சுமார் ரூ.11 கோடியும், 2வது இடம் பிடிப்பவருக்கு சுமார் ரூ.10.13 கோடியும் கிடைக்கும். இந்த போட்டியில் குகேஷ் 50 சதவீதம் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என சர்வதேச செஸ் சம்மேளனமான ஃபிடேவின் தலைமைச் செயல் அதிகாரி எமி சுடோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து டி.குகேஷ்  “இந்தப் போட்டியில் பட்டம் வெல்வதற்கு எனக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். பொதுவாக, கணிப்புகள் மற்றும் யாருக்கு அதிக வாய்ப்பு யாருக்கு இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இறுதியில் கேமை வெல்ல முடியும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!