undefined

தீபாவளிக்கு மகளிர் உரிமைத் தொகை... ரூ.1000 குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

 

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. 15ம் தேதி விடுமுறை தினமாக இருந்தால் 14ம் தேதியே வரவு வைக்கப்படும். இந்நிலையில், தீபாவளி பண்டிகை இம்மாதம்12ம் தேதி வருவதால், இந்த மாதம் முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வங்கிகளில் வரவு வைக்கப்படும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு நவம்பர் 25-ம் தேதி முதல் குறுந்தகவல் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகைக் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தகுதிகள் இருந்தும் ஏராளமான பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி லட்சக்கணக்கானவர்கள் மேல் முறையீடு செய்தனர். 

அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் மொத்தம் பதினோரு லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் கூடி இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், நவம்பர் 25-ம் தேதி முதல் இவர்களுக்கு குறுந்தகவல்  அனுப்பப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!